செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட பூசணிக்காய்கள்


செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட பூசணிக்காய்கள்
x
தினத்தந்தி 5 Jun 2021 11:09 PM IST (Updated: 5 Jun 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட பூசணிக்காய்கள்

ஆதனக்கோட்டை, ஜூன்.6-
ஆதனக்கோட்டை அருகே வடவாளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பூசணிக்காய்களை விற்பனை செய்ய முடியாமல் செடியிலேயே பறிக்காமல் விட்டுள்ளனர். இது குறித்து வடவாளம் முத்து நகரை சேர்ந்த கலியன் என்ற விவசாயி கூறும்போது, ஒரு ஏக்கர் பரப்பளவில் பூசணிக்காய் சாகுபடி செய்திருந்தேன். சமையலுக்கும் திருஷ்டிக்காகவும் அனைவராலும் விரும்பி வாங்கக்கூடிய இந்த பூசணிக்காயை உற்பத்தி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் செலவு ஆனது. நல்ல விளைச்சலும் இருந்தது. ஆனால் ஊரடங்கால் இதனை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி வயலிலேயே பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டேன். இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே  தமிழக அரசு குறைந்தபட்ச நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Next Story