பழுதடைந்த ரேஷன் கடையை தாசில்தார் ஆய்வு


பழுதடைந்த ரேஷன் கடையை தாசில்தார் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 12:59 AM IST (Updated: 6 Jun 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே பழுதடைந்த ரேஷன் கடையை தாசில்தார் ஆய்வு செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் அம்பை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது.

இதையடுத்து பழுதடைந்த ரேஷன் கடையை தாசில்தார் வெங்கட்ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் குருகுலராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story