விதிகளை மீறியவர்களிடம் 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


விதிகளை மீறியவர்களிடம் 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2021 8:19 PM GMT (Updated: 5 Jun 2021 8:19 PM GMT)

விதிகளை மீறியவர்களிடம் 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆண்டிமடம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பலர் வெளியே சுற்றித்திரிகின்றனர். இது குறித்து. தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆண்டிமடம் சுகாதாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா தோற்று பரிசோதனையில் இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி இ-பதிவு உள்ளதா என்று கேட்டு விசாரித்து, இ-பதிவு இல்லாத 50 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். முககவசம் அணியாமல் வந்த 18 பேருக்கு தலா ரூ.200 வீதம் 3,600 ரூபாயும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 10 பேரிடம் தலா ரூ.500 வீதம் 5 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 8,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மருத்துவம் சார்ந்த அத்தியாவசிய தேவைக்கு வந்தவர்களை அனுமதித்து அனுப்பினர். இதையடுத்து நேற்று ஆண்டிமடம் கடைவீதியில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் யாரும் வரக்கூடாது, என்று அறிவுறுத்தினர். துணை தாசில்தார் காமராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், சுகாதார ஆய்வாளர் உமாபதி மற்றும் போலீசார் ஆண்டிமடம் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய தேவைக்கு வருகின்ற இருசக்கர வாகனங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டும் கொடுக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story