மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது


மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2021 1:49 AM IST (Updated: 6 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கண்டியங்கொல்லை புதுத்தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 29). இவர் நேற்று முன்தினம் அதிகாலை அரசு அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 3 சாக்குகளில் மணல் அள்ளி, தனது மோட்டார் சைக்கிளில் கடத்தியதாக தெரிகிறது. அப்போது அவரை, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிடித்து விசாரித்தார். இதில் முருகன் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை, சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story