மின்னல் தாக்கி தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன
செந்துறை அருகே மின்னல் தாக்கி தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 35). விவசாயி. நேற்று மாலை அப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில், செந்தில்குமாரின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தென்னை மரம் எரிவதை பார்த்தனர். மற்றொரு மரத்திற்கும் தீ பரவிய நிலையில், அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தென்னை மரத்தில் எரிந்த தீ அணைந்தது. இதன் காரணமாக அருகே உள்ள வீடுகள், வைக்கோல் போர் தப்பித்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story