சுற்றுலா தலங்களில் முதன்மை செயலாளர் ஆய்வு
குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா, கலைப்பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திர மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா, கலைப்பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திர மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
சுற்றுலா, கலைப்பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திர மோகன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அந்த வகையில் திற்பரப்பு அருவிக்கு சென்ற அவர், அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணை, படகுதளம், சிறுவர் பூங்கா மற்றும் நீர் வீழ்ச்சி பகுதி போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாத்தூர் தொட்டிபாலத்துக்கு சென்றார். அங்கு பாலத்தில் தண்ணீர் செல்லும் பகுதி, காட்சி கோபுரம், பூங்கா போன்றவற்றை பார்வையிட்டார். மேலும் பாலத்தின் வடிவமைப்பு பற்றியும் கேட்டறிந்தார்.
கன்னியாகுமரி
தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சென்றார். அங்கு கடற்கரையில் நிறைவேற்றப்பட்டுள்ள சுற்றுலா மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story