நெல்கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


நெல்கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 2:20 AM IST (Updated: 6 Jun 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். 
கலெக்டர் ஆய்வு 
வத்திராயிருப்பில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை கலெக்டர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். 
தொடர்ந்து கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், கான்சாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மன் ரக நெல் பயிர்களை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை. எனவே இந்த ரக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். 
கொள்முதல் 
அப்போது கலெக்டர், அம்மன் ரக நெல்லை, விவசாயிகளிடமிருந்து இந்த வருடம் கொள்முதல் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இதுபோன்ற ரக நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டாமென விவசாயிகளுக்கு அறிவுரை கூறினார். பின்னர் ராமசாமியாபுரத்தில் களம் அமைப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து வருவாய் துறை அலுவலர்களிடம் களம் அமைப்பதற்கு உண்டான இடத்தினை தேர்வு செய்ய உத்தரவிட்டார். 
பெரியார் அணை 
இந்த ஆய்வு பணியை முடித்துவிட்டு வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியார் அணையின் நீர் இருப்பு மற்றும் அணையின் நிலவரம் குறித்து அணைப்பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
தொடர் மழையின் காரணமாக கான்சாபுரத்திலிருந்து அத்திகோவில் செல்லும் சாலையில் ஏற்பட்ட சாலை அரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். 
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராம சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை சங்கரநாராயணன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திருவாசகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story