முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Jun 2021 5:03 AM IST (Updated: 6 Jun 2021 5:03 AM IST)
t-max-icont-min-icon

முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நல்லம்பள்ளி, ஜூன்.6-
நல்லம்பள்ளி அருகே உள்ள அங்கனாம்புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அ.கொல்லஅள்ளியை சேர்ந்த செல்வம் (வயது 52), நரசிம்மன் (40), சந்தனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (43) என்பதும், முயல் வேட்டையாட சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
=======

Next Story