நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 21 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 517 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 461 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 857 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 410 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 114 பேர் இறந்தனர். மீதமுள்ள 4 ஆயிரத்து 333 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் மொத்தம் 354 ஆக்சிஜன் படுக்கைகளில் 333 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 21 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளது.
கூடலூர், பந்தலூர் பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் ஆய்வக ஊழியர்கள் 13-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கூடலூர் அருகே காரமூலா பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் மற்றும் அவரது 44 வயது மகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.
இதில் மகன், அங்கன்வாடி மையங்களுக்கு உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். ஒரே குடும்பத்தில் 2 பேர் உயிரிழந்ததால், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story