வளர்ப்பு வனவிலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் புலிகள் காப்பகங்களில் உள்ள வளர்ப்பு வனவிலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேட்டியின்போது கூறினார்.
ஊட்டி
தமிழகத்தில் புலிகள் காப்பகங்களில் உள்ள வளர்ப்பு வனவிலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேட்டியின்போது கூறினார்.
சிங்கம் உயிரிழப்பு
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானது. இதில் ஒரு சிங்கம் இறந்தது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோவை மாவட்டத்தில் ஆனைமலை, நெல்லை மாவட்டத்தில் களக்காடு ஆகிய புலிகள் காப்பகங்களில் உள்ள வளர்ப்பு வனவிலங்குகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவைகளுக்கு தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள், புலிகள் காப்பகங்களில் வளர்ப்பு வனவிலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். முதுமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் முகாம்களில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தொற்று உறுதியானால் மேற்கொண்டு அனைத்து சிகிச்சையும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story