ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி


ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 6 Jun 2021 5:07 AM IST (Updated: 6 Jun 2021 5:07 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி

ஊட்டி

ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, எல்க்ஹில், லவ்டேல் போன்ற வனப்பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டியில் உள்ள பாம்பேகேசில் பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. 

தொடர்ந்து அப்பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த செம்மறி ஆட்டை கடித்து இழுத்து சென்றது. இதில் அந்த ஆடு இறந்தது. இந்த நிலையில் மீண்டும் சிறுத்தைப்புலி வராமல் இருக்க நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த பகுதிக்கு சென்று குடியிருப்புகளை சுற்றி இருந்த புதர்களை வெட்டி அகற்றினர். 

ஊட்டி நகரில் சிறுத்தைப்புலி புகுந்து செம்மறி ஆட்டை கடித்து கொன்றதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே சிறுத்தைப்புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story