பெருநகர சென்னை தடுப்பூசி முகாம்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


பெருநகர சென்னை தடுப்பூசி முகாம்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 5:19 PM IST (Updated: 6 Jun 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார்.

நேற்று காலை சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்னா தெருவில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை கமிஷனர் பார்வையிட்டார். பின்னர் 14-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மொத்த மீன் வியாபாரம் மட்டும் தொடங்க உள்ளதால், அங்கு பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கினார்.

இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினார். பின்னர், பல்லவன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முதற்கட்ட உடற் பரிசோதனை மையத்தையும், பர்னபி சாலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு டாக்டர்கள் நேரடியாக சென்று முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளும் பணி மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறையையும் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story