செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் பூமிக்குள் உள்வாங்கிய கிணறால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் பூமிக்குள் உள்வாங்கிய கிணறு பூமிக்குள் புதைந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் உள்ள பாண்டூர் கிராமத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டு சிறப்பு கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திறந்தவெளி கிணறு மற்றும் மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து தினந்தோறும் பாண்டூர் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அந்த கிணறு உள்வாங்கி பூமிக்குள் புதைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பாண்டூர் கிராம மக்களுக்கு நேற்று குடிநீர் வினியோகம் செய்வதில் தடங்கல் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பாண்டூர் கிராமத்தில் கிணறு அமைக்கும் போது அதிகாரிகள் சரிவர ஆய்வு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தற்போது இந்த கிணறு பூமிக்குள் புதைந்து உள்ளது. இனி வரும் காலங்களில் ஊராட்சிகளில் இது போன்ற பணிகள் நடைபெறும் போது அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பணிகள் சிறந்த முறையில் அமைத்திட வழிவகை செய்திடவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story