ஏனாம் கடற்கரை தீவில் 16 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு


ஏனாம் கடற்கரை தீவில் 16 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 7:21 PM IST (Updated: 6 Jun 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

ஏனாம் கடற்கரை தீவில் 16 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கலால்துறையினர் அழித்தனர்.

ஏனாம், 

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் ஏராளமான கடலோர தீவுகள் உள்ளன. இங்கு சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திரா போலீசாருடன், சேர்ந்து ஏனாம் கலால்துறையினர் அந்த தீவுகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.

ஆந்திரா-ஏனாம் எல்லையில் கராகுமுண்டி காட்டுதீவில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 80 பீப்பாய்களில் 16 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கள்ளச்சாராய ஊறலை அங்கேயே அதிகாரிகள் கொட்டி அழித்தனர். இதுகுறித்து கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் வைத்திருந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதன்மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

இந்த மாதத்தில் மட்டும் ஏனாமில் 2-வது முறையாக தீவில் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story