திருவள்ளூரை அடுத்த பூண்டியில் வாழ்வாதாரம் இழந்த இருளர் இன மக்களுக்கு நிவாரண உதவி
தமிழக அரசு கொரோனா தொற்று 2-வது அலையை முழுவதுமாக கட்டுப்படுத்தும் விதமாக எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்து இருந்தது.
இதன் காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருளர் இன பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ப்ரீத்திபார்கவி, அவர்களுக்கு உதவும் விதமாக நேற்று திருவள்ளூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து 600 இருளர் இன மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அவர்களின் கிராமங்களுக்கு 2 வாகனங்களில் ஏற்றி அனுப்பினார். பின்னர் அங்கு இருந்த இருளர் இன மக்களுக்கு மளிகை தொகுப்புகளை வழங்கினார். வாகனங்களில் சென்று வீடு வீடாக சென்று ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் என யாரும் சிரமப்படாமல் இருக்க அதிகாரிகள் மூலம் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நிஷாந்தினி, மலர்விழி, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, ராஜேஷ் மற்றும் பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story