மேலும் 1,068 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியாகினர்.
1,068 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மாதம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்திருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும், 1,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
8 பேர் பலி
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும், அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 180-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 967 குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 765-ஆக உள்ளது.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 859 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் சிகிச்சை பலனின்றி 8 பேர் நேற்று பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 556-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story