திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடக்கிறது


திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடக்கிறது
x
தினத்தந்தி 6 Jun 2021 9:30 PM IST (Updated: 6 Jun 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனை உரிய முறையில் அகற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனை உரிய முறையில் அகற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அரசு மருத்துவமனை
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 1000-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதி இருப்பதால், பலரும் இங்கு சிகிச்சை பெற வருகிறார்கள். தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 350-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர ஆக்சிஜன் படுக்கைக்காக காத்திருப்பவர்கள் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
குவிந்து கிடக்கும்மருத்துவ கழிவுகள்
இதன் காரணமாக அனைத்து வார்டுகளிலும் முழுகவச ஆடைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் தினமும் ஏராளமானவை செயல்பட்டு வருகிறது. இந்த வார்டுகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகள் திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு வருகின்றன. 
இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். இந்த கழிவுகள் மூலம் பொதுமக்களும், நோயாளிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த மருத்துவ கழிவுகளை அகற்றுகிற பணியாளர்களும் பாதுகாப்பு உடை அணியாமல் அகற்றி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு தொற்றுக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story