திருப்பூர் தென்னம்பாளையத்தில் மீண்டும் காய்கறி சந்தை
திருப்பூர் தென்னம்பாளையத்தில் மீண்டும் காய்கறி சந்தை,மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையத்தில் மீண்டும் காய்கறி சந்தை,மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியுள்ளது.
தென்னம்பாளையம் சந்தை
கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக காய்கறி சந்தைகள், மீன் சந்தைகள் செயல்பட அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி இன்று (திங்கட்கிழமை) மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை செயல்பட தொடங்கியது. காய்கறி வியாபாரிகள் பலர் விற்பனையில் ஈடுபட்டனர். இதுபோல் மீன் சந்தையிலும் மீன் விற்பனை நடைபெற்றது.
கடும் நடவடிக்கை
இந்த சந்தைகளில் வியாபாரிகள் பலரும் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதற்கிடையே ஒரு சில பொதுமக்களும் மீன் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வது குறித்த தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்று பொருட்கள் வாங்கி சென்றனர். இதனால் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தென்னம்பாளையம் சந்தையில் மொத்த விற்பனையில் மட்டும் தான் வியாபாரிகள் ஈடுபட வேண்டும். பொதுமக்களுக்கு சில்லரை வியாபாரம் செய்தால், அதிகமாக பொதுமக்கள் கூடுவதற்கு காரணமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் மொத்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அந்த வாகனத்தில் சென்று மொத்தமாக காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story