சாராயம் விற்ற 4 பேர் கைது
சாராயம் விற்ற 4 பேர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சவுக்கத்தலி ஆகியோர் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பூட்டை ஏரிக்கரை அருகே சாராயம் விற்ற சங்கராபுரத்தை சேர்ந்த சிவமணி (வயது 26), தியாகராஜபுரம் சுடுகாடு அருகே சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி(56) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மல்லாபுரம் பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் சிலம்பரசன்(27), கொடியனூர் பகுதியில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் கிருஷ்ணன்(32) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story