திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பிடித்து எரிந்தது

திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 6 Jun 2021 10:26 PM IST (Updated: 6 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பிடித்து எரிந்தது

திருக்கோயிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மணலூர்பேட்டை அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரின் வயலில் நின்ற தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. பலத்த மழைக்கு இடையிலும் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்ததை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் தீ அணைந்தது. 

Next Story