விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை


விழுப்புரத்தில்  8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2021 10:27 PM IST (Updated: 6 Jun 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தற்கொலை

விழுப்புரம், 
விழுப்புரம் கீழ்ப்பாக்கம் பெரியார் நகர் ரசாக் லே-அவுட் தெருவை சேர்ந்தவர் வனத்து சின்னப்பன். இவருடைய மகள் அபி ஏஞ்சல் (வயது 14). விழுப்புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அபிஏஞ்சல் வீட்டு வேலை ஏதும் செய்யாமல், செல்போனில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த அவருடைய தாய், ஏன் வீட்டுவேலை செய்யாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாய்? என அபிஏஞ்சலை கண்டித்துள்ளார்.  இதனால் மனமுடைந்த அபிஏஞ்சல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்து, வலியால் அலறி துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அபிஏஞ்சல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story