ஆற்றங்கரை கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் சிப்பி, சங்குகள்
ஆற்றங்கரை கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் சிப்பி, சங்குகள்
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் குதிரை, கடல்பசு உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதைத்தவிர இயற்கையாகவே கடலுக்குள் பல அரியவகை சிப்பிகளும், சங்குகளும் கடலில் உள்ளன. இந்தநிலையில் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ஆற்றங்கரை கடல் பகுதியில் கடல் அலை மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் கடலில் இருந்து பல அரிய வகை சிப்பிகளும் மற்றும் சங்குகளும் கரை ஒதுங்கி கிடக்கின்றன. தற்போது முழு ஊரடங்கு காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கரை ஒதுங்கி கிடக்கும் சிப்பி, சங்குகளை சேகரிக்க யாருமில்லாததால் கடற்கரை பகுதி முழுவதும் அதிக அளவில் சிப்பிகள் கரை ஒதுங்கி கிடைக்கின்றன. இதேபோல் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையிலும் பல அரிய வகை சிப்பி, சங்குகளும் கரை ஒதுங்கி கிடக்கின்றன
Related Tags :
Next Story