வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்க கோரிக்கை


வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2021 11:18 PM IST (Updated: 6 Jun 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதவணை தொகையை 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை,

தென்மாவட்ட எர்த்மூவர்ஸ் (மண்அள்ளும் எந்திர) உரிமையாளர்கள் முன்னேற்ற நலசங்கத்தின் மாநில தலைவர் தங்கபாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் தர்மர், மாவட்ட தலைவர் முத்துகுமரேசன், மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தற்போது ஏற்பட்டுள்ள முழு ஊரடங்கால் தென்மாவட்டங்களில் இயங்கி வரும் மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைகளை 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். அத்துடன் அதற்குரிய வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதவிர சாலைவரி மற்றும் காப்பீடு செலுத்துவதற்கான காலத்தையும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.மேலும் இந்த மனுவை தமிழக முதல்-அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.


Next Story