ராமநாதபுரம் அரண்மனை பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இல்லை என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்


ராமநாதபுரம் அரண்மனை பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இல்லை என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:19 PM IST (Updated: 6 Jun 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரண்மனை பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இல்லை

ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரண்மனை பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இல்லை என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
புதிக கட்டுப்பாடுகள்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வருகிற 14-ந்தேதி காலை 6 மணிவரை தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள பவுண்டு கடை ரோடு, வைசியர் வீதி, பாண்டி கண்மாய் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி மொத்த வியாபார கடைகள் தவிர மீதமுள்ள பலசரக்கு கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இப்பகுதிகளில் சில்லரை விற்பனை, நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. அரண்மனை பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. ராஜா பள்ளி விளையாட்டு மைதானம், பாரதிநகர் அம்மா பூங்கா பகுதியில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பரமக்குடி சின்னக்கடை வீதியில் சில்லரை வியாபாரம் மற்றும் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், எமனேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும்.
காய்கறி கடைகள்
முதுகுளத்தூர், கமுதி பஸ் நிலையங்கள், சாயல்குடி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும். ராமேசுவரம் ரெயில் நிலையம் அருகே பயணிகள் தங்கும் இடத்தில் செயல்படும் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் செயல்படும். மீன் மொத்த வியாபாரம் பழைய மார்க்கெட் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். டவர் அருகில் தொடர்ந்து செயல்படும். ஆர்.எஸ் மங்கலம், அபிராமம் மற்றும் பார்த்திபனூர் பகுதிகளில் ஏற்கனவே பஸ் நிலையங்களில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும்.
தொண்டி பஸ் நிலையம், கீழக்கரை பகுதியில் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும். மீன் மொத்த வியாபாரம் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் செல்லும் வழியில் செயல்படும். வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தைகள் எங்கும் செயல்பட அனுமதி இல்லை. கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக்கல் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. பேக்கரியில் இனிப்பு, காரம் மற்றும் ரொட்டி வகைகள் பார்சல் மூலம் விற்பனை செய்யலாம். அனைத்து காய்கறி கடைகளும், மொத்த மற்றும் சில்லரை வணிகங்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
இந்த தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Next Story