சுகாதார பணிகள் மும்முரம்


சுகாதார பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:27 PM IST (Updated: 6 Jun 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

சுகாதார பணிகள் மும்முரம்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று சுகாதார பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. 

செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து, தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Next Story