வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை


வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 6 Jun 2021 11:32 PM IST (Updated: 6 Jun 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை ராம்நகரில் உள்ள துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேற்று காலை 7 மணிக்கு துணை சூப்பிரண்டு சபாபதி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கு காலத்தில் அவசியமின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.
இது போல சுற்றித்திரிபவர்களுக்கு நூதன முறையில் தண்டனை கொடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டு முடிவு எடுத்தார். அதன்படி திருவேகம்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுகாதார ஊழியர்களை வரவழைத்து ஊரடங்கில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரிசோதனை மேற்கொண்டதால் அந்த பகுதியில் வாகனத்தில் சுற்றித்திரிபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.


Next Story