1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்


1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:49 PM IST (Updated: 6 Jun 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கி வைக்கப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த கவுரிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த சென்னாலக்குடி கிராமத்தில் வனத்துறையின் மூலம் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வனத்துறையின் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 1,000 மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது வேம்பு, தேக்கு, வேங்கை, செம்மரம், பூவரசு, நாவல் ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் வனத்துறையின் மூலம் விவசாயிகளின் விளைநிலத்தில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வழங்கி நடவு பணி நடைபெறுகிறது. தற்போது விவசாயி முருகப்பன் என்பவரின் நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. தேவைக்கேற்ப விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி விளைநிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ரமேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story