பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டியதால் தீர்த்து கட்டினேன் கைதான நண்பர் வாக்குமூலம்


பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டியதால் தீர்த்து கட்டினேன் கைதான நண்பர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:03 AM IST (Updated: 7 Jun 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே போதை ஊசி தகராறில் வாலிபரை கொன்ற வழக் கில் கைதானவர், தனது பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டிய தால் தீர்த்துகட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை

கோவை அருகே போதை ஊசி தகராறில் வாலிபரை கொன்ற வழக் கில் கைதானவர், தனது பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டிய தால் தீர்த்துகட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

வெட்டிக்கொலை

கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 22), பெயிண்டர். வால்பாறை டேம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (18). நண்பர்களான 2 பேரும் போடிபாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

அவர்கள் 2 பேருக்கும் போதை ஊசி போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி போதை ஊசி போடுவதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், ஜீவானந்தத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். 

நண்பர் கைது 

தலைமறைவான மணிகண்டனை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

கைதான மணிகண்டன் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜீவானந்தமும், மணிகண்டனும் குனியமுத்தூர் பகுதிக்கு சென்று போதை ஊசி வாங்கி வந்து உள்ளனர். 

இதையடுத்து மணிகண்டன், ஜீவானந்தத்துக்கு போதை ஊசி செலுத்தினார். ஆனால் அவருக்கு போதை ஏறவில்லை. 

பெற்றோரை கொல்வதாக மிரட்டல் 

எனவே அவரிடம் வேறு ஊசி வாங்கி வா என்று ஜீவானந்தம் கூறி உள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறியதற்கு, செல்போனை விற்று ஊசி வாங்கி வா என்று வற்புறுத்தி உள்ளார். 

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜீவானந்தம், எனக்கு போதை ஊசி வாங்கி கொடுக்க வில்லை என்றால் உனது பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தனது வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து அவரை வெட்டி கொன்றார். பிறகு அவருடைய உடலை அருகே உள்ள முள்வேலியில் வீசினார் என போலீசார் தெரிவித்தனர். 


Next Story