ரூ.1 கோடி மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ராணுவ அமைச்சகத்தின் உதவியுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் ராணுவ அமைச்சகத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படுகிறது.
விருதுநகர்,
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ராணுவ அமைச்சகத்தின் உதவியுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் ராணுவ அமைச்சகத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படுகிறது.
தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாருக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் 6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.
மேலும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் ஏற்பாட்டின் பேரில் விருதுநகர் அருகே உள்ள ஒரு தனியார் சிமெண்டு நிறுவனம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
திரவ ஆக்சிஜன் உற்பத்தி
இந்தநிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ராணுவ அமைச்சகத்தின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. இங்கு 1 நிமிடத்திற்கு 1000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த அமைப்பு பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் செலவிட்டுள்ளது.
வாய்ப்பு
இதுகுறித்து மத்திய மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ராணுவ அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஆக்சிஜன் திரவத்தை உற்பத்தி செய்யும் மையம் அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும் என்றும் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் திரவத்தை உற்பத்தி செய்ய மையத்தில் வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த திரவ ஆக்சிஜன் மையத்தின் மூலம் 400-க்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பிற அரசு அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவைப்பட்டால் இங்கிருந்து அனுப்பவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story