கோவையில் 2645 பேருக்கு கொரோனா 38 பேர் பலி


கோவையில் 2,645 பேருக்கு கொரோனா; 38 பேர் பலி
x
கோவையில் 2,645 பேருக்கு கொரோனா; 38 பேர் பலி
தினத்தந்தி 7 Jun 2021 1:21 AM IST (Updated: 7 Jun 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 2645 பேருக்கு கொரோனா 38 பேர் பலி

கோவை

கோவையில் கொரோனா நோய்த் தொற்றின் 2-வது அலையில் தொற்றுப் பரவலும், உயிரிழப்பும் அதிகரித்து உள்ளது. கடந்த ஒருமாத காலமாக உயர்ந்து வந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு தற்போது குறையத் தொடங்கி உள்ளது. ஆனால், கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.


இந்த நிலையில் நேற்று அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,506 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 269 பேர் பலியாகியுள்ளனர்.

கோவையில் நேற்று புதிதாக 2,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 23 ஆக உயர்ந்து உள்ளது.

இது தவிர, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 4,733 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். 
கோவையில் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 978 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 31 ஆயிரத்து 539 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 21 ஆயிரத்து 857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 505 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 369 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 915 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 116 பேர் இறந்தனர். 


மீதமுள்ள 4,338 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் உள்ள 354 ஆக்சிஜன் படுக்கைகளில், 336 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ளது. 18 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

Next Story