தோட்டத்தில் மின்ஒயர் திருட்டு
களக்காடு அருகே தோட்டத்தில் மின்ஒயரை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு, ஜூன்:
களக்காடு அருகே உள்ள வடக்குச் சாலைப்புதூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 41). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் வடமநேரி குளத்துக்கரை அருகே உள்ளது. அங்கு அவர் ஆழ்துளை கிணற்றுக்கு மின் வினியோகம் கொடுப்பதற்காக மின் ஒயர் பொருத்தி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அதில் பாதி அளவு ஒயரை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் தினேஷ்குமார் தோட்டத்தில் இருந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர் மீதம் இருந்த ஒயரையும் திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த தினேஷ்குமார் சத்தம் போட்டதில் முருகேஷ் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். மேலும் ஏற்கனவே அங்கு இருந்த ஒயர்களையும் முருகேஷ்தான் திருடினார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து திேனஷ்குமார், களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story