புதுக்கோட்டை தொண்டரிடம் சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ


புதுக்கோட்டை தொண்டரிடம் சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ
x
தினத்தந்தி 7 Jun 2021 1:56 AM IST (Updated: 7 Jun 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை தொண்டரிடம் சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது

புதுக்கோட்டை
சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்தநிலையில் திடீரென தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அந்தவகையில் புதுக்கோட்டை தொண்டரிடம் செல்போனில் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் தொண்டரிடம் சசிகலா நலம் விசாரித்து பேசுகிறார். பதிலுக்கு தொண்டர் நலம் விசாரித்து கட்சிக்கு தான் பணியாற்றியதும் மற்றும் போராட்டங்களில் சிறை சென்றதும் குறித்து பேசியுள்ளார்.
கட்சியை சரி பண்ணிடலாம்
அந்த ஆடியோவில் சசிகலா பேசுகையில், நான் நிச்சயமாக வருவேன். கட்சியை சரி பண்ணி அம்மா கொண்டு போன மாதிரி கொண்டு போக வேண்டும். தலைவர் காலத்தில் கட்சி எப்படி இருந்ததோ அந்த மாதிரி செயல்பட வேண்டும். அதுபோல நிச்சயமாக செய்வேன். கவலைப்படாதீர்கள். விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நீங்கள் எல்லாம் ஆரம்ப காலத்தில் உள்ளவர்கள். கட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்.
இந்த உரையாடலில் தொண்டர் பதில் அளிக்கையில், நீங்கள் (சசிகலா) நிச்சயமாக வர வேண்டும். அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கட்சியில் செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம் அம்மா' என்கிறார்.என நான் வந்திருவேன் கவலைப்படாதீங்க என கூறியபடி சசிகலா பேசியுள்ளார். இந்த ஆடியோவில் 4.36 நிமிடங்கள் வரை உரையாடல் உள்ளது. இந்த ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story