கொரோனா வராமல் தடுப்பதாக புரளி: சேலத்தில் கருவாடு வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்-வீதி வீதியாக வியாபாரிகள் விற்பனை


கொரோனா வராமல் தடுப்பதாக புரளி: சேலத்தில் கருவாடு வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்-வீதி வீதியாக வியாபாரிகள் விற்பனை
x
தினத்தந்தி 7 Jun 2021 3:20 AM IST (Updated: 7 Jun 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வராமல் தடுப்பதாக தகவல் பரவியதால் சேலத்தில் கருவாடு வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரிகள் வீதி வீதியாக விற்பனை செய்தனர்.

சேலம்:
கொரோனா வராமல் தடுப்பதாக தகவல் பரவியதால் சேலத்தில் கருவாடு வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரிகள் வீதி வீதியாக விற்பனை செய்தனர்.
கருவாடு 
கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கு பொதுமக்கள் கபசுர குடிநீரை குடித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் வீடுகளில் முருங்கைக்கீரை சூப் வைத்து அவ்வப்போது அருந்தி வருகிறார்கள். 
இந்த நிலையில் சேலத்தில் கருவாடு வாங்கி சமைத்து சாப்பிட்டால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் எதுவும் வராது என்று பொதுமக்கள் மத்தியில் புரளி பரவியது. இதனால் சேலம் மாநகரில் தற்போது கருவாடு வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் கருவாடு வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். 
வீதி வீதியாக விற்பனை
சேலம் அஸ்தம்பட்டி, சின்னதிருப்பதி, மணக்காடு, பிள்ளையார்நகர், குமாரசாமிபட்டி, வின்சென்ட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சிலர் வீதி வீதியாக கருவாடு விற்பனை செய்து கொண்டிருந்தனர். சளி, இருமல் உள்ளிட்டவை உடனடியாக குணமாகும். கருவாடு சாப்பிட்டால் கொரோனா வராது என்று கருவாடு விற்பனை செய்யும் நபர்கள் பொதுமக்களும் தெரிவித்தனர். இதை நம்பிய பெண்களும் பல வகையான கருவாடுகளை ஆர்வமுடன் வாங்கினர். 
100 கிராம் நெத்திலி கருவாடு ரூ.50-க்கும், குஞ்சு கருவாடு ரூ.50-க்கும், கிலாங்கா கருவாடு ரூ.70-க்கும், கொல்லி கருவாடு உள்ளிட்ட பல வகையான கருவாடு் விற்பனை செய்யப்பட்டது. இதனை அசைவம் சாப்பிடும் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான கருவாடு வகைகளை வாங்கினர். 
ஆர்வம்
கொரோனா ஊரடங்கு காலத்தில் இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அசைவ பிரியர்கள் கடந்த 3 வாரங்களாக கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் வகைகள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஆனால் தற்போது வீதி வீதியாக கருவாடு விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். 

Next Story