பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்


பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 7 Jun 2021 5:18 AM IST (Updated: 7 Jun 2021 5:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சத்தை நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 15 மாதங்களில் சுமார் 105 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சிலர் அரசு ஊழியர்கள் ஆவார்கள். பெரும்பாலானவர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள், சிறு வியாபாரிகள் ஆவார்கள். கடந்த மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பிறகு குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மற்றும் அரியலூர், திருச்சி, தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் ஒரு நோய் பிரிவான நிமோனியா தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அவர்களின் பெயர், விவரங்கள் தற்போது கொரோனாவால் இறந்தவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்காமல் விடுபட்டுள்ளது.

அவ்வாறு நிமோனியா தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் பெயர்களை கொரோனாவால் பலியானவர்களின் பெயர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேபோல் கொரோனா தொற்றால் இறந்த கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையாக தமிழக அரசு அறிவித்து வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா முதல் அலை தொடக்கம் முதல் 2-வது அலையின் தாக்கம் வரையிலான அனைத்து உயிரிழப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்திடவும் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தமிழக அரசு உடனடியாக உத்திரவிட வேண்டும்.

இனி கொரோனா தொற்றால் யாரேனும் உயிரிழந்தால் அதற்கான மருத்துவ சான்றிதழை உடனடியாக வழங்கி உடலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் அரசின் நிவாரண உதவித்தொகை, இறந்தவர் வாரிசுகளுக்கு எளிதில் சென்றடைவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story