காந்தி மார்க்கெட் காய்கறி, இறைச்சி கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றம்
அரியலூரில் இன்று முதல் காந்தி மார்க்கெட் காய்கறி, இறைச்சி கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்,
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூரில் இன்று (திங்கட்கிழமை) முதல் நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள காய்கறி கடைகள், இறைச்சி, மீன், கோழி கடைகள் அனைத்தும் அந்தப் பகுதியில் திறந்து, வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக காய்கறிகள் மொத்த விற்பனை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும், சில்லரை வியாபாரம் பஸ் நிலையம், காமராசர் திடல் ஆகிய இடங்களில் நடைபெறும். மேற்கண்ட 3 இடங்களிலும் இறைச்சி, கோழி, மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story