ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து முற்றுகை


ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து முற்றுகை
x
தினத்தந்தி 7 Jun 2021 12:09 AM GMT (Updated: 7 Jun 2021 12:16 AM GMT)

செந்துறை அருகே ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்தது.

செந்துறை,

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்கள், ரேஷன் கடையில் வழங்கக்கூடிய உணவு பொருட்களை வாங்கி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 4 மாதங்களாக தரம் குறைவான குண்டு ரக அரிசியை வழங்குவதாக குற்றம்சாட்டி, கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது பற்றி தகவல் அறிந்து வந்த செந்துறை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சன்னரக அரிசி வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story