மயிலாப்பூரில் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியை http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற YouTube channel- லில், பக்தர்கள் நேரலை ஒளிபரப்பு மூலம் காணலாம். குறிப்பாக நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உள் புறப்பாடும் பக்தர்களின் கோரிக்கையின் படி ஒளிபரப்பப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு தரிசித்து கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருவருள்
பெறலாம்.
அதேபோல், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சாமி அருள் பெறலாம்.
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சிகள் https://youtu.be/r-g-M6sG9LYஎன்ற யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பக்தர்கள் இதனை கண்டுகளித்து பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் அருளை பெறலாம். மேற்கண்ட தகவல்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story