நந்தியம்பாக்கம் ஊராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அடிக்கடி மின்தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.
இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ் தமிழ்நாடு மின்சார வாரியம் மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை விடுத்தார். அதன்படி நேதாஜி நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நிறைவடைந்து, அதன் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் மின்சார வாரிய சென்னை தண்டையார்பேட்டை கோட்ட செயற்பொறியாளர் ராம்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்து புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். இதில், துணைத் தலைவர் கலாவதி மனோகரன், வார்டு உறுப்பினர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story