சார்-பதிவாளர் அலுவலகங்கள் இயங்க அனுமதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கி, ஊரடங்களில் தளர்வுகளை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் பயனாக மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மே மாதம் 11-ந் தேதி 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்த ஊரடங்கு அதே மாதம் 24-ந் தேதி முடிவடைந்த நிலையில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதன. அந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்ததன.
இந்த நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் அதாவது வருகிற 14-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் இயங்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, கர்நாடகத்தில் மாவட்ட பதிவாளர். அலுவலகங்கள் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story