சோமந்துரை, தென்சித்தூர் கிராமங்களில் 6 தெருக்கள் தனிமைபடுத்தப்பட்டது
சோமந்துரை, தென்சித்தூர் கிராமங்களில் 6 தெருக்கள் தனிமைபடுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
ஆனைமலை அடுத்த சோமந்துறை மற்றும் தென்சித்தூர் ஊராட்சிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா 2-வது அலையில் கிராம புறங்களில் அதிகமாேனார் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சோமந்துறை மற்றும் தென்சித்தூர் கிராமங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டது. மேலும் தினமும் சராசரியாக 5-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து 2 கிராமங்களிலும் காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 120 பேரிடம் சளி மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 கிராமங்களில் 6 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தடுப்பு வைத்து அடைக்கப்பட்டன.
மேலும் அந்த பகுதிகள் முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசனி தெளித்தனர். தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியே வர கூடாது என்றும், வெளிநபர்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story