திருப்பத்தூரில் கடைகள் பகல் ஒரு மணிவரை மட்டுமே செயல்படும். வியாபாரிகள் அறிவிப்பு


திருப்பத்தூரில் கடைகள் பகல் ஒரு மணிவரை மட்டுமே செயல்படும். வியாபாரிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 10:18 PM IST (Updated: 7 Jun 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் கடைகள் பகல் ஒரு மணிவரை மட்டுமே செயல்படும். வியாபாரிகள் அறிவிப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக கடந்த மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தளர்வில்லா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் நேற்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகைக் கடைகள், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் வந்தனா கார்க், தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது, எனத் தெரிய படுத்தப்பட்டது. 

ஆகையால் திருப்பத்தூர் வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தாமாகவே முன்வந்து திருப்பத்தூரில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நேற்று முதல் 14-ந்தேதி வரையிலும் மாலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அனைத்துக் கடைகளும் திறக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 
ஆகையால் திருப்பத்தூர் பகுதியில் அனைத்து மளிகை வியாபாரிகள் அனைத்து வியாபார நிறுவனங்களும் இந்த முடிவை ஏற்று கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு அளிப்பது எனத் தீர்மானம் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இவர்களை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் பாராட்டினார்.

Next Story