கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன டி.கே.சிவக்குமார் பேட்டி


கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2021 10:24 PM IST (Updated: 7 Jun 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. நாங்கள் ரூ.100 கோடியில் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசு அனுமதி வழங்கினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவோம். மக்களின் உயிர்களை காக்க எங்கள் கட்சி தலைவர்கள் சக்தி மீறி பணியாற்றி வருகிறார்கள்.

தடுப்பூசி வழங்குவதுடன் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு உணவு தானிய தொகுப்புகளையும் வழங்கி வருகிறோம். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டன. இத்தகைய நெருக்கடியான நேரத்திலும் மக்களை ஏமாற்றும் பொருட்டு, தடுப்பூசிகளை தலா ரூ.900-க்கு விற்பனை செய்கிறார்கள்.

ஆனால் போஸ்டர்களில் பா.ஜனதாவினர் தங்களின் புகைப்படங்களை போட்டுக் கொண்டு மின்னுகிறார்கள். ஆனால் எங்கள் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்க சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story