திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது இலுப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 50).விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களை மினி வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்றுள்ளார். மினி வேனை இவரது மகன் சக்தீஸ்வரன் ஓட்டினார். மினி வேன் மதுரை-பரமக்குடி நான்கு வழிச் சாலையில் உள்ள சக்குடி விலக்கு அருகே சென்ற போது பழுதாகி நின்று விட்டது. இதனால் குருநாதன் இறங்கி மினி வேன் அருகே ஓரமாக நின்று உள்ளார். அப்போது மானாமதுரையில் இருந்து மதுரைக்கு காய்கறிகள் வாங்க சரக்கு வேன் ஒன்று சென்றது. அந்த வேனை மானாமதுரையைச் சேர்ந்த திருப்பதி (45) என்பவர் ஓட்டி வந்தார். சரக்கு வேன் சக்குடி விலக்கு அருகே சென்ற போது ரோட்ேடாரம் நின்றிருந்த குருநாதன் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து குருநாதன் மகன் சக்தீஸ்வரன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சரக்கு வேன் டிரைவர் திருப்பதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.