ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்


ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 7 Jun 2021 11:39 PM IST (Updated: 7 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.

மானாமதுரை,

மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தனது சொந்த செலவில் தமிழரசி எம்.எல்.ஏ. நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று காந்திஜி நகர், வின்சென்ட் நகர் பகுதியில் உள்ள 125 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் யூனியன் துணை தலைவர் முத்துச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் ஜானகி, மீனவரணி பாஸ்கரன், மாணவரணி கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளையான்குடி சந்தைப்பேட்டையில் தாசில்தார் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் சுகாதார பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என 270 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார். இதேபோல வளையனேந்தல் கிராமத்தில் மாணவரணி செயலாளர் சாமிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.சுப.மதியரசன், நகர கழகச்செயலாளர் நஜிமுதீன், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜன், தமிழ்மாறன், வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், அய்யாசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story