புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெங்கமேடு போலீசாருக்கு தகவல் வந்து. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, கொளத்துபாளையம், பெரியகுளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அண்ணாநகரை சேர்ந்த ஹரி பாஸ்கர் (வயது 26), பாளையத்தை சேர்ந்த மனோஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.6 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன
Related Tags :
Next Story