தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை எதிரே பட்டாளம்மன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இந்த ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் மீன்கள் செத்த மிதக்கிறதா? அல்லது ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கப்பட்டுள்ளதா? என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் தண்ணீர் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. எனவே செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, மீன்கள் செத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story