மரத்தில் ஏறி விளையாடிய கரடி


மரத்தில் ஏறி விளையாடிய கரடி
x
தினத்தந்தி 7 Jun 2021 11:47 PM IST (Updated: 7 Jun 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

மரத்தில் ஏறி விளையாடிய கரடி.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிக்கு அருகிலேயே அமைந்து இருக்கின்றன. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள் சில நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோத்தகிரி அருகே மூணுரோடு பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் மரத்தின் மீது கரடி ஒன்று ஏறி விளையாடி கொண்டு இருந்தது. இதை பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். 

சிறிது நேரம் மரத்தில் ஏறி விளையாடிய கரடி, அதன்பிறகு தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரவேனு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மூணுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, கேசலாடா, ஜக்கனாரை, அளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. 

தேயிலை தோட்டங்களில் நடமாடி வந்தாலும், அவை தொழிலாளர்களுக்கு தொந்தரவு அளிப்பதில்லை. இருப்பினும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கரடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story