ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை-புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பேட்டி
பொதுமக்கள் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்.
சிவகங்கை,
பொதுமக்கள் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்.
பொறுப்பேற்பு
புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற செந்தில்குமாரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிதரன், ராஜேந்திரன், வெற்றிசெல்வன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை எந்த நேரத்திலும் 8608600100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்தாளர்
பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பூக்கடை உதவி ஆணையாளராகவும் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் மதுரை நகர் காவல்துணை ஆணையாளராகவும் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்றுள்ள இவர் எழுத்தாளராகவும் சாதித்து உள்ளார். இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மனைவி சுதாமதி கண் மருத்துவரான இவர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு செம்மொழிபாரதி என்ற மகளும், திருவாசகம் என்ற மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story