திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்-தொழிலாளி மீது வழக்கு


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்-தொழிலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:51 PM IST (Updated: 7 Jun 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லாவி:
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாற்றுத்திறனாளி பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால் (வயது 32). தொழிலாளி. இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீபாலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஸ்ரீபாலின் மனைவி கோபித்து கொண்டு, எட்டிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் ஸ்ரீபால் வீட்டின் அருகில் 28 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் குடியிருந்து வருகிறார். ஸ்ரீபாலுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீபால் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
கர்ப்பம்
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் அந்த மாற்றுத்திறனாளி பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீபாலிடம் வலியுறுத்தி வந்தார். இதனிடையே அவர் 3 மாத கர்ப்பிணி ஆனார். இதை ஸ்ரீபாலிடம் தெரிவித்தபோது, அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஸ்ரீபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகூறி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய சம்பவம் சிங்காரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story