திருச்செங்கோட்டில் லாரியில் மது கடத்தல்; டிரைவர் கைது
திருச்செங்கோட்டில் லாரியில் மது கடத்தல்; டிரைவர் கைது.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு வழியாக காய்கறி லோடு ஏற்றி செல்லும் லாரிகளில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக திருச்செங்கோடு நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷ்யாம் சுந்தர், சுரேஷ் தலைமையிலான போலீசார் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காய்கறி லோடு ஏற்றி சென்ற டாரஸ் லாரியை நிறுத்தினர். பின்னர் லாரியில் சோதனை செய்தபோது காய்கறி மூட்டைகளுக்கு நடுவில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 25 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர் குமாரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story